[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

“பேட் புக் செய்தால் கோட் டெலிவரி” - பிளிப்கார்ட்க்கு ரூ1 லட்சம் அபராதம்

flipkart-slapped-rs-1-lakh-penalty-for-delivering-coat-instead-of-cricket-bat

புக்கிங் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருளை டெலிவரி செய்த புகாரில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காலத்திற்கேற்ப நம்முடைய வாழ்க்கை முறையில் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதன் தனக்கு அனுகூலமாக பல்வேறு விஷயங்களை செய்து கொள்கின்றான். அதில் ஒன்றுதான் தான் இருக்கும் இடத்திலே உலகில் எந்த மூலையில் இருக்கும் பொருட்களையும் கொண்டு வந்தது. இந்த வசதியை ஆன்லைன் வர்த்தகம் மிகவும் எளிதாக்கியது. 

ஒரு காலத்தில் கடை கடையாக ஏறி நமக்கு பிடித்த பொருட்களை வாங்கி வருவோம். குறிப்பாக திருவிழா, பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் ஆடை, பொருட்களை உள்ளிட்டவற்றை வாங்க குடும்பத்துடன் கடைகளுக்கு படையெடுப்போம். ஆனால், தற்போது அந்த நிலைமை இல்லை. வீட்டில் இருந்தபடியே நமக்கு தேவையான பொருட்களை புக்கிங் செய்தால், குறிப்பிட்ட சில நாட்களில் அது நம்மை வந்து சேர்கின்றன. ஆன் லைன் வர்த்தகத்தில் ஐயன்பாக், ஃபேன் உள்ளிட்ட அன்றாடம் நாம் பயன்படுத்தும் அடிப்படை பொருட்கள் உட்பட எல்லாமே கிடைக்கின்றன.

                  

இந்தியாவைப் பொறுத்தவரை ஆன்லைன் வர்த்தகத்தில் பிளிப்காட், அமேசான் உள்ளிட்டவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சமீப காலமாக செய்திதாள்களை கவனித்தாலே தெரியும் இந்த நிறுவனங்கள் எந்த அளவிற்கு விளம்பரங்கள் செய்திருந்தன. தீபாவளி பண்டிகையையொட்டி சலுகைகளையும் அதிரடியாக அறிவித்தன. 

ஆனால், ஆன்லைன் வர்த்தகத்தில் சிக்கல்கள் இல்லாமலும் இல்லை. சில நேரங்கள் பொருட்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வருவதில்லை. அதேபோல், நாம் புக்கிங் செய்த பொருள் ஒன்றாகவும் நமக்கு டெலிவரி செய்யப்பட்ட பொருள் ஒன்றாகவும் இருக்கும். பொருள் மாறி வரும் பிரச்னை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், சமீபத்தில் பொருள் மாறி டெலிவரி செய்யப்பட்ட விவகாரத்தில் பிளிப்கார்ட் சிக்கியது. வதிராராஜா என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய மொபைல் போனில் இருந்து கிரிக்கெட் பேட் ஒன்றினை புக் செய்துள்ளார். அதே ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி பொருளுக்கு உரிய ரூ6,074 பணத்தை பெற்றுக் கொண்டு டெலிவரி நபர் பார்சலை ராவிடம் கொடுத்துள்ளார். அந்த பார்சலை ராவ் பிரித்து பார்த்த போது கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக கருப்பு நிற கோட் இருந்துள்ளது. இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திடம் முறையிட்ட ராவ், தான் புக்கிங் செய்த பேட்டை வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால், பலமுறை ராவ் வலியுறுத்தியும் பிளிப்கார்ட் உரிய பொருளை கொடுக்கவில்லை. 

              

இதனையடுத்து, நுகர்வோர் மன்றத்தில் இந்த ஆண்டு மே 13ம் தேதி பிளிப்கார்ட் மீது இழப்பீட்டு தொகை கேட்டு புகார் ஒன்றினை ராவ் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று புதன்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், பிளிப்கார்ட் நிறுவனம் ராவ் புக் செய்த கிரிக்கெட் பேட்டை 6 வாரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது. அதேபோல், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ராவ்க்கு இழப்பீடாக ரூ50 ஆயிரம் மற்றும் நுகர்வோர் நல நிதியத்திற்கு ரூ50 ஆயிரம் வழங்க நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close