[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

“ப.சிதம்பரத்தை காவலில் எடுக்க வேண்டிய அவசியமில்லை” - அமலாக்கத்துறை

enforcement-department-said-there-is-no-need-to-detain-p-chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஏற்கனவே ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். விசாரணைக் காவலுக்குப் பிறகு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் ப.சிதம்பரத்தை வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கடந்த 5 ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ‌ 

இதனிடையே, ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளிலிருந்து ஜாமீன் வழங்கக் கோரி தனித்தனியே மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தேவைப்படும்போது சிதம்பரத்தை கைது செய்து விசாரிப்போம் எனவும் நீதிமன்ற காவலில் இருப்பதால் சிதம்பரத்தால் ஆதாரங்களையும் சாட்சிகளையும் அழிக்க முடியாது எனவும் அமலாக்கத்துறை, வாதத்தின் போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close