[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

“இது பைக் அல்ல; லோடு ஆட்டோ ” - வைரலான வீடியோ

video-of-7-people-and-2-dogs-riding-on-a-single-bike-shocks-people

ஒரே பைக்கில் 7 பேர், இரண்டு நாய்கள், வீட்டு பொருட்கள் என பெரிய குடும்பமே பயணிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். மூன்று பேர் பயணம் செய்தாலும் அது குற்றாமாகும் என சாலை விதிகள் சொல்கின்றன. ஆனால் ஒரே பைக்கில் 7 பேர், இரண்டு நாய்கள், வீட்டு பொருட்கள் என பெரிய குடும்பமே பயணிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

'இது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்' என்ற தலைப்பில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் பைக் ஓட்டுபவரை தவிர்த்து மொத்தம் 6 பேர் மிகவும் நெருக்கமாக அமந்திருக்கின்றனர். மனிதர்கள் மட்டுமின்றி இரண்டு நாய்களும் பயணம் செய்கின்றன. ஒரு நாய், பக்கவாட்டில் மாட்டப்பட்டிருக்கும் பையில் அமர்ந்திருக்கிறது. மற்றொரு நாய் பைக்கின் முன் பகுதியில் அமர்ந்திருக்கிறது. 

சாலையில் சென்ற யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர, அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இது பைக் அல்ல, லோடு ஆட்டோ என்றும், அந்த நாயுக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்துள்ளது போன்ற நகைச்சுவை கமெண்டுகளால் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதேவேளையில் இது மிகவும் ஆபத்தான பயணம் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close