[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

 “என்னிடம் கேட்டதை கொடுத்துவிட்டேன்” - ப.சிதம்பரம் 

p-chithambaram-speech-in-court

என்னுடைய மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை கேட்டார்கள் கொடுத்துவிட்டேன் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, முதல்கட்ட விசாரணையை முடித்து கொண்டு ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ புகார் தெரிவித்தது. வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் அதனால் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் எனவும் சிபிஐ தரப்பு வாதாடியது.

இதையடுத்து தனது வாதத்தை தொடங்கிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சிதம்பரம் பேச வேண்டும் என அனுமதி கேட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் பேசக் கூடாது என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷர் மேத்தா மறுப்பு தெரிவித்தார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் பேசலாம், நீதிமன்ற தீர்ப்பு உள்ளது என அபிஷேக் மனு சிங்வி வாதாடினார். 

இதையடுத்து சிதம்பரம் பேச அனுமதி வழங்கப்பட்டது. அப்போது என்னுடைய மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை கேட்டார்கள் கொடுத்துவிட்டேன் என ப.சிதம்பரம் தெரிவித்தார். மேலும், “எனக்கு வெளிநாட்டு வங்கிக் கணக்கு உள்ளதா என கேட்டார்கள். என் மகனுக்கு உள்ளதா என கேட்டார்கள். என் மகன் குறித்து அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் தொடர்பாக என் மகனே பதிலளித்துள்ளார். ஜூன் 6, 2018-ல் விசாரணை நடத்தினார்கள். அதனை வரவழையுங்கள். எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை என பாருங்கள்.” எனக் குறிப்பிட்டார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close