[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே இனி பேச்சுவார்த்தை - ராஜ்நாத் சிங்

if-talks-are-held-with-pakistan-it-will-now-be-on-pok-says-rajnath-singh

பாகிஸ்தானுடன் இனி இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதென்றால் அது அந்நாடு ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி பற்றிதான் இருக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவின் கல்கா நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பயங்கரவாதத்தை ஆதரிப்பதையும் ஊக்குவிப்பதையும் முற்றிலும் பாகிஸ்தான் நிறுத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றார். ஒருவேளை பேச்சுவார்த்தை என்றாலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் இருக்குமே தவிர்த்து மற்ற எந்தப் பிரச்னை பற்றியும் இந்தியா பேச்சு நடத்தாது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

உதவிக்காக ஒவ்வொரு நாட்டின் கதவையும் பாகிஸ்தான் தட்டி வருவதாகக் கூறிய அவர், நாம் ஒரு தவறும் செய்யாதபோது நம்மை மிரட்ட அந்நாடு முயற்சிக்கிறது என்றார். இந்தியாவுடன் சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்துமாறு பாகிஸ்தானிடம் உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்கா தெரிவித்து விட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close