[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது..!

resolution-revoking-article-370-from-jammu-kashmir-passed-in-lok-sabha

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நேற்று ரத்து செய்யப்பட்டது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டது. சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

இந்நிலையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களைவயில் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து அதன்மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இந்த மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவிற்கு ஆதரவாக 361 வாக்குகளும், எதிராக 66 வாக்குகளும் பதிவாகின. இதேபோல சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதாவிற்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் அரசாணை வெளியிடப்படும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close