[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

ஊடகவியலாளர் ராவிஷ் குமாருக்கு மகசேசே விருது !

ravish-kumar-wins-magsaysay-award-for-his-journalism

ஆசியாவின் நோபல் விருது எனக் கருதப்படும் மகசேசே விருது ஊடகவியலாளர் ராவிஷ் குமாருக்கு இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.

என்.டி.டி.வி இந்தியாவின் மூத்த நிர்வாக ஆசிரியராக இருக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 44 வயதாகும் ராவிஷ் குமார், "பிரைம் டைம்" என்‌ற நிகழ்ச்சியின் வாயிலாக மக்களின் பிரச்னைகளை தீர்க்க உதவி வருகிறார். மக்களின் குரலாக ஒலிக்கும் அவரது சேவையை கவுரவிக்கும் விதமாக இந்தாண்டுக்கான மகசேசே விருது ராவிஷ் குமாருக்கு அறிவி‌க்க‌ப்பட்டுள்ளது. 

வரும் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அவருக்கு மகசேசே விருது வழங்கப்படுகிறது. மறைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக ஆசியக் கண்டத்தில் அரசுப்பணி, பொதுச் சேவை, சமூக சேவை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை ஆகிய பிரிவுகளில் சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் ‌இந்த விருது வழங்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close