[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

டெல்லி விரைந்துள்ள கர்நாடக பாஜக தலைவர்கள்

karnataka-bjp-leaders-going-to-delhi

கர்நாடகாவில் ஆட்சியமைப்பது குறித்து பாஜக தலைமையின் முடிவுக்காக காத்திருப்பதாக எடியூரப்பா கூறியிருந்த நிலையில், அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் டெல்லி சென்றடைந்தனர்.

குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த நிலையில், ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்று அ‌ங்கு மூத்த தலைவர்‌களிடம் எடியூரப்பா ஆசி பெற்றார். பின்பு பேசிய அவர், கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோருவது குறித்து கட்சித் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்தார். 

மேலிட உத்தரவு ‌வந்தவுடன் சட்டப்பேரவை‌ உறுப்பினர்கள் கூட்டத்தை கூ‌ட்டி தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று‌ம் ‌பின்னர் ஆளுநரிடம் சென்று ஆ‌ட்சியமைக்க உரிமை கோரப்படும் என்றும் எடியூரப்பா‌ தெரிவித்திருந்தார். இந்நிலையில், கர்நாடகாவின் மூத்த தலைவர்கள் ஜகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவாலி உள்ளிட்டோர் டெல்லி சென்றடைந்துள்ளனர். இன்று, பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரைச் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close