[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

பெண்களிடம் தரக்குறைவாக நடந்த வழக்கில் ஆம்ஆத்மி எம்எல்ஏ கைது

aam-adhmi-party-mla-arrest

டெல்லியில் 60 வயது முதியவரை தாக்கியதற்காகவும், புகார் அளிக்க வந்த பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும் கூறி ஆம் ஆத்மி எம்எல்ஏ மொகன்யா கைது செய்யப்பட்டார்.

தெற்கு டெல்லியின் கான்பூரில் செய்தியாளர் சந்திப்பில், எம்எல்ஏ மொகன்யா பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த காவல்துறையினர், அவரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்த கைது சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியில் பிரதமர் மோடி அவசரநிலையை பிரகடனப்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டினார். செய்தியாளர்கள் முன்னிலையில் தமது கட்சி எம்எல்ஏவை கைது செய்வதன் மூலம் நாட்டு மக்களுக்கு மோடி என்ன சொல்ல நினைக்கிறார் என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close