[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

“எவ்வளவு நேரமானாலும் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள்” - எடியூரப்பா 

yediyurappa-speech-in-karnataka-assembly

எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

இன்று கூடிய கர்நாடக சட்டப்பேரவையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவின்றி அரசியல் அமைப்புக்கு எதிராக இருப்பதால் விளக்கம் பெறும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது. மேலும் தங்களது எம்.எல்.ஏக்களை பாஜக கடத்தி விட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்தது. 

இதைத்தொடர்ந்து ஆளுநர் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த பரிசீலிக்கமாறும், முதலமைச்சர் அவை நம்பிக்கையை எப்போதும் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அவை நடவடிக்கையை கண்காணிக்க ஆளுநர் சிறப்பு அலுவலர் ஒருவரும் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்துள்ளார். 

இந்நிலையில், கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா சட்டப்பேரவையில் பேசுகையில், “காங்கிரஸ் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். நள்ளிரவு வரை கூட விவாதம் தொடரட்டும் ஆனால் இன்றைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close