[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

மறு வாழ்வு மையத்தில் இருந்து தப்பித்து பாறைக்குள் சிக்கிய இளைஞர் !

man-25-flees-from-de-addiction-centre-in-ballari-gets-stuck-between-2-huge-rocks

கர்நாடாகவின் பெல்லாரி பகுதியில் மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிக்க முயன்றவர் இரு பாறைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டார்.

கர்நாடகாவின் கோப்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவேந்திரா. இவருக்கு வயது 25. இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், இவரது மனைவி கடந்த 3ஆம் தேதி மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார். இந்த மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிக்க தேவேந்திரா திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து இவர் நேற்று காலை 7 மணியளவில் மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிக்க முயன்றார். 

அப்போது இவர் அங்குள்ள அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க பாறைகள் வழியாக பாதையை தேர்ந்தெடுக்க நினைத்தார். அதன்படி அவர் பாறைகள் வழியாக சென்ற போது கணபதி ஆலயத்திற்கு அருகிலுள்ள இரண்டு பாறைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அதிலிருந்து வெளியே வர தேவேந்திராவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே அவர் அருகில் இருப்பவர்களை நோக்கி உதவிக்காக குரல் எழுப்பியுள்ளார். 

அதன்பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தேவேந்திராவை மீட்டனர். அதற்குபிறகு இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close