[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்
  • BREAKING-NEWS “கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது...”சூர்யா கொடுத்த பதிலடி
  • BREAKING-NEWS “மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்

மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கு போட்டிபோடும் சிவசேனா - கூட்டணி குழப்பம்

growing-shiv-sena-stakes-claim-to-maharashtra-chief-minister-s-post-in-new-saamana-editorial

மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருக்கும் நிலையில், அடுத்த முதல்வராக சிவசேனாவை சேர்ந்தவர் இருப்பார் என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவும், சிவசேனா கட்சியும் கூட்டணியில் உள்ளன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பாஜக 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 

“மகாராஷ்டிராவில் பாஜகவோடு சேர்ந்தே தேர்தலை சந்திக்கிறோம். ஆனால் மாநிலம் முழுக்க எங்களது கட்சி வளார்ந்துள்ளது. இந்த வளர்ச்சி மிக நிலையானதாகவும் உள்ளது. தேர்தல் முடிந்ததும், மாநிலம் முழுக்க காவி மயமாகும் போது, மாநில முதல்வராக சிவசேனாவை சேர்ந்தவர் இருப்பார்” என  அக்கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாமனா’வில் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக சிவசேனா செய்தித்தொடர்பாளார் சஞ்சய் ராவத் பேசும் போது ஆதித்யா தாக்கரே முதலமைச்சர் பதவிக்கு வருவார் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உள்ளார். முன்னதாக, பாஜக தலைவர் அமித் ஷா, ‘என்ன நடந்தாலும், பாஜகவைச் சேர்ந்தவர்தான் முதலமைச்சர்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிவசேனா தங்கள் தரப்பிலிருந்து தான் அடுத்த முதலமைச்சர் என்று செய்தி வெளியிட்டுள்ளதால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close