[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

அருண் ஜெட்லி இல்லாத புதிய அமைச்சரவை..? அமித் ஷாவிற்கு வாய்ப்பு

amith-shah-likely-inductions-in-new-cabinet

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இடம்பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 30-ஆம் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் புதிய அமைச்சரவை குறித்து பாஜக மூத்த தலைவர்கள் இன்று கூடி விவாதிக்க உள்ளனர். இதில் மத்திய அமைச்சராக கட்சியின் தலைவர் அமித் ஷா விருப்பம் தெரிவித்திருப்பதாக பாஜக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமித் ஷாவிற்கு உள்துறை அல்லது நிதித்துறை ஒதுக்கப்படக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

உள்துறையை பாஜகவின் மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் ஏற்கெனவே வகித்திருப்பதால், அதை அவர் விட்டுத்தர வாய்ப்பில்லை என்று பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. ஆகையால், உடல்நலக்குறைவால் ஓய்வில் இருக்கும் அருண் ஜெட்லியின் நிதித்துறை அமித் ஷாவுக்கு அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள அருண் ஜெட்லி, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் தோல் திசு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார். இதனால் தற்போதைய மத்திய அரசின் இறுதிபட்ஜெட்டை அருண் ஜெட்லி தாக்கல் செய்யவில்லை. நிதியமைச்சர் பொறுப்பில் ரயில்வே பியூஷ் கோயல்தான் தாக்கல் செய்தார். உடல்நலக்குறைவால் மக்களவைத் தேர்தலிலும் அருண் ஜெட்லி போட்டியிடவில்லை.

இந்நிலையில் உடல்நலம் காரணமாக அவர் மோடி அரசின் புதிய அமைச்சரவையில் இடம்பெற மாட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நிதித்துறை அமித் ஷாவிற்கு ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அமைச்சராகிவிட்டால், கட்சி விதிப்படி பாஜக தலைவர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்யக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close