[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

நிறைவு பெற்றது இறுதிக்கட்ட வாக்குப்ப‌திவிற்கான பரப்புரை

election-campaign-ends-for-7th-phase-lok-sabha-election

மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்ப‌திவிற்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 7வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. 8 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு அன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதிகபட்சமாக பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் 9 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் 8 தொகுதிகள், இமாசலப்பிரதேசத்தின் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சண்டிகர் மத்திய ஆட்சிப் பகுதியின் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் நாளை மறுதினம் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு உத்தரவுப்படி, மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று இரவுடன் பரப்புரை ஓய்ந்தது. இந்நிலையில் மற்ற 50 தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்தது.

இதேபோல தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரையும் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் நடைபெறுகிறது. அன்றைய தினமே வெற்றி, தோல்வி நிலைமை தெரியவரும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close