[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

“ஆட்சிக்கு வந்தால் 3 லட்சத்து 60 ஆயிரம் தருவோம்” - ராகுல் காந்தி

if-congress-come-to-power-will-give-rs-3-6-lacks-for-people-rahul-gandhi

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மக்களுக்கு வழங்கப்படும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகளில் 5 கட்டங்கள் நிறைவடைந்ததுள்ளது. இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே நடைபெறவுள்ளன. வரும் 19ஆம் தேதியோடு நிறைவடையும் வாக்குப்பதிகள் மொத்தமாக 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில் 6 மற்றும் 7ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதற்காக ஹரியானாவின் சிர்ஸாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல், ‘இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நான் ஒன்றை சொல்ல வேண்டும். நரேந்திர மோடி ஒரு பொய் உறுதி அளித்தார். அவர் அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவேன் என்று பொய் கூறினார். ஆனால் இப்போது உறுதியளிக்கிறேன், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் 5 வருடங்களுக்குள் அனைவரது வங்கிகணக்கிலும் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் செலுத்துவோம்” என்று கூறினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close