[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொலை செய்த இளைஞர்! கேரளாவில் அதிர்ச்சி!

2-killed-in-explosion-at-wayanad-s-sulthan-batheri-area-in-kerala

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறி, பக்கத்து வீட்டு பெண்ணை ஒருவர் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி அருகே உள்ள நாய்க்கட்டி பகுதியில் வசித்து வந்தவர் பென்னி. இவரது பக்கத்து வீட்டில் அமினா என்ற பெண், தமது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் அமினா மட்டுமே தனியாக இருந்ததை நோட்டமிட்டு, அவரது வீட்டுக்குள் பென்னி நுழைந்ததாகவும், தமது உடலில் கட்டிக்கொண்டு வந்த பன்றிகளை கொல்ல பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்களை அமினா அருகில் சென்று வெடிக்க செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இதில் அவரும், அமினாவும் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அமினாவின் கணவர் நாசர் தொழுகைக்கு சென்றிருந்ததாலும், அவரின் குழந்தை வெளியே விளையாடிக்கொண்டு இருந்ததாலும், இருவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். வெடிச்சத்தம் கேட்ட அண்டைவீட்டினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பென்னி வீட்டிலிருந்து ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அமினா வீட்டுக்குள் பென்னி நுழைந்தது ஏன்? தானும் உயிரிழந்து, பக்கத்துவீட்டு பெண்ணான அமினாவையும் கொன்றது ஏன்? என்பன குறித்து விசாரித்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close