[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

பராமரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

supreme-court-dismisses-sterlite-s-plea

பராமரிப்பு பணிக்காக, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய அந்த நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் தாக்கல் செய்த மனுக் களை விசாரிக்க போதிய நேரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், பராமரிப்பு பணிகளுக்காக ஆலையை திறக்க அனுமதி க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று அந்த மனு வை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close