[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

காதலியை தீ வைத்து கொன்றது ஏன்? காதலன் அதிர்ச்சி தகவல்

spurned-love-reason-for-setting-thrissur-college-girl-on-fire

கேரளாவில் காதலியை தீ வைத்து எரித்துக்கொன்றது ஏன் என்பது பற்றி கைது செய்யப்பட்ட காதலர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்

கேரளாவின் திருச்சூர் அருகிலுள்ள சியாராம் பகுதியைச் சேர்ந்தவர் நீது (22). இவரது தாய் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தந்தை, நீதுவை தனியாக விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இதையடுத்து தனது பாட்டி மற்றும் மாமாவுடன் வசித்து வந்த நீது, கொடக்காராவில் உள்ள அக்சிஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்துவந்தார். 

இந்நிலையில் நேற்று அதிகாலை, இவரது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். வீட்டுக்கு வெளியே ஒரு பைக் நின்றது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குளியலறையில் தீக் காயங்களுடன் விழுந்து கிடந்தார் நீது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். விசாரணை நடத்திய போலீசார் வடக்கேகாடு பகுதியை சேர்ந்த நிதீஷ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. 

இதுபற்றி போலீசார் கூறும்போது, ’’நிதிஷ், எம்.பி.ஏ முடித்து, கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன் று வருடங்களாக நீதுவைக் காதலித்து வருகிறார். இது அவர்களின் உறவினர்களுக்கும் தெரியும். நிதிஷ் அவரை, திருமணத்துக்கு வற்புறுத்தி யுள்ளார். படிப்பை முடித்துவிட்டுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார் நீது. இது தொடர்பாக இவர்களுக்கு பிரச்னை இரு ந்து வந்தது. 

இந்நிலையில் நீது வேறு ஒரு நண்பருடன் பழகி வந்துள்ளார். இது தெரிந்ததும் ஆத்திரமடைந்தார் நிதிஷ். நேற்று அதிகாலை 5 மணிக்கு நீதுவின் வீட்டுக்கு வந்த நிதீஷ், திருமணம் பற்றி மீண்டும் பேச்சை எடுத்துள்ளார். வழக்கம் போல மறுத்துள்ளார் அவர். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காலை 7.30 மணியளவில் அவரை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தீ வைத்து எரித்தார். பின் ஓடிவிட்டார்’’ என்று தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நிதிஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கடந்த மாதம் திருவல்லா நகரில் கல்லூரி மாணவி அஜின் ரெஜி மாத்யூ என்பவர் 19 வயது காதலி மீது தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் அதிரிச்சி ஏற்படுத்திய நிலையில் அதே போன்று இன்னொரு சம்பவம் நடந்துள்ளது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close