ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நடந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற மாற்றுத்தினாளி இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருகட்டமாக, டெல்லியில் இன்று அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல திமுக சார்பில் அக்கட்சியின் எம்பி திருச்சி சிவா சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர்கள் மட்டுமின்றி சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோரும் சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற மாற்றுத்தினாளி இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த தாவலா அர்ஜூன் ராவ் என்பவர் ஆந்திர முதல்வர் நடத்திவரும் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்திருந்தார்.
இதனிடையே போராட்டம் நடைபெற்ற ஆந்தர பிரதேச இல்லத்தின் அருகே ஜஸ்வந்த் சிங் சாலையில் சக்கர நாற்காலியில் அர்ஜூன் ராவ் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலை சோதனை செய்தபோது பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டதாக அர்ஜூன் ராவ் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அர்ஜூன் ராவ் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனை நடைபெறும் என டெல்லி காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு
புரோ கைப்பந்து லீக் - சென்னை-கொச்சி அணிகளிடையே நாளை அரை இறுதி
“பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க நடவடிக்கை” - நிதின் கட்காரி
மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்தின் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை
அதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு