[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

மேற்கு வங்க விவகாரம்: உச்சநீதிமன்றத்தை இன்று நாடுகிறது சிபிஐ!

cbi-vs-mamata-banerjee-cbi-will-move-supreme-court-on-today

மேற்கு வங்கத்தில் காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க மறுக்கப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்றத் தை நாட சிபிஐ முடிவு செய்துள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

பின்னர் விடுவிக்கப்பட்டனர். இது அரசி யல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டுள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட சிபிஐ முடிவு செய்துள்ளது. சிபிஐ இடைக்கால இயக் குநர் நாகேஷ்வர ராவ் இதைத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று முறையிடுகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட் டுதலின் படி, இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்று தெரிகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : CBIMamata BanerjeeSupreme Court
Advertisement:
Advertisement:
[X] Close