[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா

சீன உணவகத்தில் ராகுல்காந்தி கொடுத்த திடீர் விருந்து - மாணவர்கள் நெகிழ்ச்சி

rahul-gandhi-s-surprise-date-with-students-at-delhi-chinese-joint

டெல்லியில் உள்ள சீன உணவகத்தில் யாரும் எதிர்பாராதவகையில் 7 மாணவர்களை திடீரென சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களுடன் உணவருந்தி ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக டெல்லியில் உள்ள சீன உணவகத்தில் மாணவர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களுடன் உணருந்தியுள்ளார். நாடு முழுவதிலுமிருந்து 7 மாணவர்கள் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர். அப்போது மக்களின் நலனுக்காக சில ஆலோசனைகளை மாணவர்கள் ராகுல்காந்தியிடம் எடுத்துரைத்தனர். அத்தகைய யோசனைகளில் சில காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.

இதில் பங்கேற்ற ஒரு மாணவர் கூறும்போது, “ ‘எனக்கு எல்லாமே தெரியும்’ என்ற சிந்தனையை கொண்டவர் அல்ல ராகுல்காந்தி என்பது எனக்கு தெரியவந்தது. திறந்த மனதுடன் உரையாடல் நடத்தினார். மக்களின் மனநிலையை அறிந்துகொள்ள முயற்சி செய்தார்” எனக் கூறினார்.

மற்றொரு மாணவர் கூறும்போது, “என்ன ஒரு எளிமையான மனிதர் ராகுல்காந்தி. அவர் தட்டில் இருந்து எனக்கு உணவு பரிமாறியது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இதுபோன்ற தலைவர்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என நான் மட்டுமல்ல.. நீங்கள் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டீர்கள்.. ” என்றார்.

மும்பையைச் சேர்ந்த ஐஐடி மாணவரான அபிலாஷூம் இந்த விருந்தில் பங்கேற்றார். இதுகுறித்து அவர் கூறும்போது, “காங்கிரஸ் கட்சியினர் உங்களுடன் உரையாட இருக்கிறார்கள் என முன்பாக தெரிவித்திருந்தனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியே வருவார் என்பது எங்களுக்கு தெரியாது. அவர் உணவகத்திற்குள் நடந்து வருவதை பார்த்து வியந்துவிட்டோம். உண்மையில் ஆச்சரியமாக இருந்தது” எனக் கூறினார்.

இளம் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்துகொள்ள இந்த விருந்தில் ராகுல்காந்தி பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த விருந்தில் பங்கேற்ற சில மாணவர்கள், திருநங்கைகள் கழிவறை வசதி இல்லாமல் சிரமப்படுவதாகவும் அதற்கு தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அத்துடன் ஜாதி, மத பாகுபாடுகள் களையப்பட வேண்டும் எனவும் அவர்கள் ராகுல்காந்தியிடம் வலியுறுத்தினர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தாங்கள் நம்புவதாக விருந்தில் பங்கேற்ற மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close