[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

நேர்மறை எண்ணங்களை வைரலாக்குங்கள்: பிரதமர் மோடி

easy-to-spread-negativity-let-s-make-positivity-viral-pm

எதிர்மறை எண்ணங்களைப் பரப்புவது மிகவும் எளிது என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேர்மறை எண்ணங்களை வைரலாக பரவுவதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஆண்டின் கடைசி மாதாந்திர வானொலி உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி, நாட்டு மக்களின் ஒட்டுமொத்த முயற்சியால் 2018-ம் ஆண்டில் இந்தியா ஏராளமாக சாதித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். நோக்கம் உறுதியாக இருந்தால், சோதனைகள் தடைக்கற்களாக மாறாது என பிரதமர் தெரிவித்தார். பல இணையதளங்கள் நேர்மறை கருத்துகளை பரப்பி வருவதாகவும், அவற்றின் லிங்குகளை பகிர்ந்து நேர்மறை கருத்துகள் வைரலாவதற்கு மக்கள் உதவவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் மின்சாரம் சென்றடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மக்களின் உறுதி காரணமாக தூய்மை பாரதம் திட்டம் 95 சதவீத இலக்கை நோக்கி முன்னேறி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். சர்தார் வல்லபாய் படேலை கவுரவிக்கும் வகையில் உலகின் மிக உயரமான சிலை ஒற்றுமையின் சிலையாக திறக்கப்பட்டிருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். தொழில் செய்வதில் எளிமை அதிகரித்துள்ளது, உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் எட்டப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close