[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

சோனியா காந்திக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

pm-modi-wishes-sonia-gandhi-on-her-birthday

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.  அவர் சோனியா காந்திக்கு நேரில் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை இன்று தெரிவிக்கிறார். அதோடு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்குகிறார். 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ள அவர், சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என பிராத்தனை செய்வதாக தெரிவித் துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close