[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

’தக்காளி எங்க இருந்து வருது?’: பதில் சொன்ன மாணவனால் கட்டாயமான விவசாய பாடம்!

back-to-the-roots-this-school-has-made-agriculture-a-compulsory-subject

மங்களூரில் உள்ள பள்ளி ஒன்றில் விவசாயத்தை கட்டாய பாடமாக வைத்துள்ளனர். இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

கர்நாடகா மாநிலம் தக்‌ஷண கன்னடாவில் உள்ள தளப்பாடியில் இருக்கிறது சாரதா விதியானிகேதனா பள்ளி. கேரள எல்லையில் உள்ள இந்தப் பள்ளியில், விவசாயத்தைக் கட்டாய பாடமாக வைத்துள்ளனர். அதன்படி 5 ஆம் வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக வயல்களுக்குச் சென்று விவசாய வேலைகள் செய்ய வேண்டும். வயல்களுக்குத் தண்ணீர் பாய்ப்பது, விதை விதைப்பது உட்பட பல்வேறு விவசாய வேலைகளை அவர்கள் செய்கின்றனர். இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விவசாய அறிவியலை பாடமாக வைக்கும் எண்ணம், சாரதா குரூப் ஆப் நிறுவனங்களின் தலைவர் எம்.பி.புரானிக்கிடம் இருந்து உருவாகியுள் ளது. எம்.எஸ்.சி, தாவரவியல் படித்துள்ள அவர் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம், ’தக்காளி எங்கிருந்து கிடைக்கிறது?’ என்று கேட்டுள்ளார். அதற்கு மாணவன் ஒருவன், மார்க்கெட்டில் இருந்து என்று பதில் சொன்னான். இதையடுத்து மாணவர்களுக்கு விவசாய அறிவை உடனடியாக ஊட்ட வேண்டும் என்று முடிவெடுத்து இந்த திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார். இப்போது, 3.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து மாணவர்க ளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

‘வெறும் தியரியாக மட்டுமல்லாமல் மாணவர்களை விவசாய நிலங்களுக்கு அழைத்துச் சென்று பிராக்டிக்கலாக அனைத்து வேலைகளையும் செய்ய சொல்வதால் அவர்களும் விவசாயிகளாக மாறுகிறார்கள். விவசாயத்தை மதிக்கிறார்கள். இயற்கையை பற்றி புரிந்துகொள்கிறார்கள்’ என்கிறார், விவசாய ஆசிரியை தீபா. 

‘காய்கறிகள் எங்கிருந்து வருகிறது என்பதை மாணவர்கள் நேரடியாக இங்கு பார்த்து புரிந்துகொள்கிறார்கள். அது எப்படி சாப்பாட்டுத் தட்டுக்கு வருகிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் நோக்கம்’ என்கிறார் மற்றொரு ஆசிரியரான பிரபுல்.

ரசாயனம் அல்லாத ஆர்கானிக் உரங்கள் பற்றியும் பயிற்சி அளிக்கிறார்கள். அதோடு 25 பசுமாடுகளும் இந்தப் பள்ளியில் உள்ளன. அவற்றின் சாணங்களை எருவாக்குவதையும் கற்றுக்கொடுக்கிறார்கள். 

இதுவரை 18 வகையான காய்கறிகளை மாணவர்கள் பயிர் வைக்கிறார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் அதற்கென தனி வயல்கள் இருக்கின்றன. அதில் பயிர் செய்வதை அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். விளையும் காய்கறிகளை மெஸ்சுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த விவசாய பயிற்சிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மேலும் சில ஏக்கர் நிலங்களை வாங்கி விவசாயம் செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

‘எங்கள் முயற்சியை சிபிஎஸ்சி அங்கீகரிக்க வேண்டும். குறைந்தப் பட்சம் இதை விருப்பப்பாடமாகவாவது அறிமுகப்படுத்த வேண்டும்’ என்கி றார் பிரபுல்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close