[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

ஃபேன்ஸி நம்பர் பிளேட்டுக்கு ரூ.16 லட்சம் செலவிட்ட ஜெய்ப்பூர் தொழிலதிபர்

jaipur-man-spends-16-lakh-for-a-fancy-number-plate

ஜெய்ப்பூரைச் சேர்ந்த நபர் தன்னுடைய காரில் ஃபேன்ஸி எண் வாங்க 16 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளார். 

ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான பொருட்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும். சிலர் செல்போன்கள் மீது அதிக ஆர்வமாக இருப்பார்கள். எந்த மாடல் போன்கள் வந்தாலும் அதனை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வார்கள். பணம் செலவிட்டு புதிய மாடல் போன்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதேபோல், சிலர் பைக்குகள் மீதும், கார்கள் மீதும் அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள். 

அந்த வகையில் கார்கள் மீது அதிக விருப்பம் கொண்டவர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் தனிஜா. இவர் புதிதாக வாங்கிய தனது காரில் ஃபேன்ஸியாக நம்பர் இருக்க வேண்டும் என விரும்பியுள்ளார். அதற்காக ஜெய்ப்பூர் ஆர்டிஓ அலுவலக அதிகாரியிடம் அணுகியுள்ளார். ரூ.1.50 கோடி ரூபாய்க்கு ஜாகுவார் வகை காரினை வாங்கியுள்ள அவர் ஃபேன்ஸியான கார் எண்ணுக்காக ஒன்றரை மாதம் காத்திருந்துள்ளார். ரூ.16 லட்சம் செலவிட்டு ‘RJ 45 CG 0001’ என்ற ஸ்பெஷல் எண்ணை பதிவு செய்துள்ளார். தனிஜாவின் கார்கள் அனைத்தும் ‘0001’ என்ற எண்ணில் தான் உள்ளது. அதேபோல், அவரது செல்போன் எண்ணில் 5 ஒன்றுகள் இருக்கும். பிரிட்டனில் F1 என்ற நம்பர் பிளேட் கொண்ட காரானது ரூ.132 கோடிக்கு இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close