[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கர்நாடக தேர்தல்: காலை 7 மணிக்கே வாக்களித்தார் எடியூ‌ரப்பா

bjp-chief-ministerial-candidate-bs-yeddyurappa-casts-his-vote-in-shikarpur

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோர் வாக்களித்தனர்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில், சிமோகா தொகுதிக்கு உட்பட்ட ஷிகர்பூர் வாக்குச்சாவடியில் எடியூரப்பா தனது வாக்கைப் பதிவு செய்தார். முன்னதாக சிகார்புரில் உள்ள கோவிலுக்குச் சென்று எடியூரப்பா வழிபாடு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது மக்கள் விரக்தியில் இருப்பதாகவும், வாக்காளர்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மத்திய அமைச்சரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான சதானந்த கவுடா, புட்டூரில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். வ‌ழக்கத்தை விட இம்முறை வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இருக்கும் என சதானந்த கவுடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close