[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த கும்பல்

woman-gang-raped-video-uploaded-on-social-media-in-rajasthan

ராஜஸ்தானில் 40 வயது மதிக்கத்தக்க பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தை சேர்ந்த 40வயது பெண்,  கடந்த மாதம், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டதாகக் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்தப்பெண் கோடா பகுதியில் உள்ள சாலையோர உணவுக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது உறவினர் இல்லத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு நன்கு அறிமுகமாக மீனா (21) என்ற நபர் அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். அவருடன் அந்தப் பெண் சென்றுள்ளார். 

ஆனால் அவர் அந்தப்பெண்ணை ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் குடும்பத்தினரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த அந்தப்பெண் நடந்தவற்றை யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அந்த இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து அந்தப்பெண்ணுக்கு தகவல் தெரியவர தற்போது அந்த நபர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close