[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

கடும் எதிர்ப்பால் ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு

centre-drops-idea-of-orange-passports-to-continue-with-current-practice-of-printing-of-last-page-of-passport

ஆரஞ்சு வண்ணத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. 

வழக்கமான நீல நிறத்திற்குப் பதிலாக ஆரஞ்சு வண்ணத்துடன், இறுதி பக்கத்தில் முகவரி விவரங்கள் இல்லாத புதிய பாஸ்போர்ட் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியது. குடிமக்களின் விவரங்களை பாதுகாக்கும் முயற்சியாக பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. 

பாஸ்போர்ட் உபயோகிப்பவர்களுக்கு விரைவில் ஆரஞ்சு வண்ண பாஸ்போர்ட் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. அதேபோல், பாஸ்போர்ட் ஆரஞ்சு நிறத்திற்கு மாறுவது இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் காவிமயமாக்கும் முயற்சி என்று விமர்சனங்களும் எழுந்தது.

இந்நிலையில், ஆரஞ்சு வண்ணத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. முகவரி உள்ளிட்ட விவரங்கள் கொண்ட பாஸ்போர்ட்டின் கடைசி பக்கம் அச்சிடப்படாது என்ற முடிவையும் மத்திய அரசு கைவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close