[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS ராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

டெங்கு காய்ச்சல் பீதியில் மேற்குவங்கம்: 40 பேர் பலி?

dengue-outbreak-in-bengal-mamata-banerjee-says-no-need-to-panic-as-40-die

மேற்குவங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவிவருகிறது. இதுவரை 40 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

பருவமழை காலத்தையொட்டி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக மஹாராஷ்டிரா, குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு பாதிப்பு மரணங்கள் அதிக அளவில் நிகழ்ந்தன. அந்தந்த மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி செயல்பட்டன.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக கொல்கத்தா மாநகராட்சி மூடி மறைக்க பார்ப்பதாக எதிர்க்கட்சியான இடது முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும், டெங்கு காய்ச்சல் தொடர்பாக சிலர் பீதியை கிளப்பி வருவதாகவும், மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக 13 மரணங்கள் மட்டுமே அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 27 பேர் இதர காய்ச்சல்களால் பலியானதாக மம்தா கூறினார். தவறான தகவல்களை பரப்புவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். டெங்கு காய்ச்சலுக்கு மகாராஷ்டிரா 695, குஜராத் 435, ராஜஸ்தான் 230, உத்தரபிரதேசம் 165, மத்திய பிரதேசம் 141, கேரளா 111 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close