[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
 • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
இந்தியா 27 Oct, 2017 10:57 AM

சுவிஸ் ஜோடி தாக்கப்பட்ட குற்றத்திற்காக 5 சிறுவர்கள் கைது

5-minors-detained-for-attack-on-swiss-couple

சுவிட்சர்லாந்து ஜோடி மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதல் தொடர்பாக, உத்தரப் பிரதேசத்தில் 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் குயன்டின் ஜெரேமி கிளர்க் (24). இவரது தோழி மேரி டிரோஸ் (24). இருவரும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். உலக அதிசயமான தாஜ்மகாலைப் பார்த்த அவர்கள், பிறகு அங்கிருந்து 40 கி.மீ தூரத்திலுள்ள ஃபதேப்பூர் சிக்ரிக்கு கடந்த ஞாயிறன்று சென்றனர். உள்ளூரைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர், அவர்களுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல் மற்றும் தடியால் சுவிட்சர்லாந்து ஜோடியை அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால், டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உத்தரப் பிரதேச அரசிடம் விளக்கம் அளிக்குமாறு கேட்டிருந்தார். இந்நிலையில் சுவிட்சர்லாந்த் ஜோடியை தாக்கிய குற்றத்திற்காக 5 சிறுவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக தகவல் கூறியுள்ள ஆக்ரா காவல்துறை உயர் அதிகாரி அமித் பதாக், சுவிட்சர்லாந்து ஜோடியினர் அளித்த தகவலின் படி, இரண்டு சிறுவர்களை கைது செய்துள்ளோம் என்றும், ஜூடானா கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான அவர்கள், 18 வயதுக்கு உட்பவர்கள் என்று கூறியுள்ளார். அத்துடன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close