[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

பதான்கோட் விமானப்படைத் தளத்தில் பிரதமர் மோடி ஆய்வு

pm-narendra-modi-visits-pathankot-air-base-will-meet-injured-soldiers

பஞ்சாப்பில் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்குள்ளான பதான்கோட் விமானப்படைத் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

டெல்லியிலிருந்து பதான்கோட் வந்த பிரதமரை, பாதுகாப்புப் படை அதிகாரிகள், தாக்குதல் நடந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பயங்கரவாதிகள் ஊடுருவிய பாதை, 4 நாட்களாக தாக்குதல் நடந்த இடங்கள், விமானப்படை தளவாடங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகள் உள்ளிட்டவற்றை பிரதமர் நேரில் பார்வையிட்டு வருகிறார்.

தாக்குதல் நடந்த விதம் குறித்து அவருக்கு அதிகாரிகள் விவரித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

பிரதமர் பதான்கோட் வந்திருப்பதையொட்டி பஞ்சாப்பையொட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையோரத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் சனிக்கிழமையன்று அதிகாலை பதான்கோட் விமானப்படைத் தளத்திற்குள் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளை தாக்கி அழிக்கும் பணி 4 நாட்களுக்கு நீடித்தது. இதில் பயங்கரவாதிகள் அனைவரும் சுட்டுவீழ்த்தப்பட்டனர். நாட்டை காக்கும் பணியில், வீரர்கள் 7 பேர் உயிர்நீத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close