JUST IN
 • BREAKING-NEWS ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீராகுமார் நாளை காலை 11.30 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்
 • BREAKING-NEWS திருவண்ணாமலை: மேல்செங்கத்தில் கிணற்றில் தூர்வாரும் பணியின் போது மண் சரிவில் சிக்கி ஒருவர் பலி
 • BREAKING-NEWS தனியார் பால் பொருட்களில் காஸ்டிக் சோடா, பிளிச்சீங் பவுடர் கலப்படம்: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 • BREAKING-NEWS ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது: ஓஎன்ஜிசியின் காவிரி படுகை மேலாளர் பவன்குமார்
 • BREAKING-NEWS சென்னை சூளை பகுதியில் உள்ள மரக்கட்டை சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
 • BREAKING-NEWS ஜூலை 1ஆம் தேதி பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் சென்னை வருகை
 • BREAKING-NEWS தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் லாரியில் இருந்து அமிலம் கசிந்து ஒருவர் படுகாயம்
 • BREAKING-NEWS தமிழகத்தில் இரட்டை குவளை முறை வேதனை தரக்கூடியது: வைகோ
 • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 179 புள்ளி குறைந்து 30,958ல் வர்த்தகம் முடிவு
 • BREAKING-NEWS அரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது?: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
 • BREAKING-NEWS நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகளுக்கான தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS அருப்புக்கோட்டையில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் எஸ்ஐ கைது
 • BREAKING-NEWS லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் குழு அமைப்பு: பிசிசிஐ
 • BREAKING-NEWS மதுரை: திருப்பரங்குன்றத்தில் லாரி மோதி பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி பலி
இந்தியா 17 Mar, 2017 02:09 PM

ஒட்டுமொத்தமாக லீவு போட்ட எய்ம்ஸ் செவிலியர்கள்

Cinque Terre

ஊதிய உயர்வை வலியுறுத்தி 2,000-க்கும் அதிமான எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் இன்று பணிக்கு செல்லாததால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நாள்தோறும் எண்ணற்ற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஊதிய உயர்வு கோரி அங்கு பணியாற்றும் 2,000-க்கும் அதிகமான செவிலியர்கள் ஒட்டுமொத்தமாக இன்று விடுமுறை எடுத்துள்ளனர். இதனால் அவசர சேவைகள் செயல்படாத நிலையில் இருக்கிறது. மேலும் ஒரு சில முக்கிய அறுவை சிகிச்சைகள் தவிர எந்தவித அறுவைச் சிகிச்சையும் மருத்துமனையில் நடைபெறவில்லை. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கூறும் போது, முடிந்தவரை நோயாளிக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். இருப்பினும் செவிலியர்கள் போதுமான அளவில் வராததால் நோயாளிகள் பாதுகாப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எய்ம்ஸ் செவிலியர் யூனியன் தலைவர் இதுகுறித்து பேசுகையில், இது எங்களின் கோரிக்கை புதிய கோரிக்கை அல்ல. நீண்ட காலமாகவே ஊதிய உயர்வு கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் நிர்வாகம் எங்களது கோரிக்கை செவிசாய்க்கவில்லை. இன்று நடைபெற்றதற்கு மருத்துவமனை நிர்வாகவே பொறுப்பு. எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால், மார்ச் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads