[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

காதி துறை காலண்டரில் மோடி... காந்தியின் பேரன் கடும் எதிர்ப்பு

tushar-gandhi-slams-modi-s-photos-on-kvic-calendar

காதி கிராம தொழில்கள் துறை வெளியிட்ட காலண்டரில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளதற்கு மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். படம் எடுப்பதற்காக நூற்பது போன்று போலியாக வேடம் போடக் கூடாது என்றும் துஷார் காந்தி தெரிவித்தார்.

காதி கிராம வாரியத்துக்கு காந்தி தேவை இல்லாமல் போய்விட்டது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக காதி காலண்டரில் காந்தி படம் இடம் பெறாததை எதிர்த்து அத்துறை பணியாளர்கள் மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலண்டரில் பிரதமர் மோடி ராட்டை சுற்றும் படம் இருப்பதை எதிர்க்கவில்லை என்றும் ஆனால் அதோடு காந்தியின் படமும் இருந்திருக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் காதி காலண்டர் மற்றும் டைரியில் காந்தி படம் இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை என்றும் ஏற்கனெவே சில ஆண்டுகள் காந்தி படம் இல்லாமல் இவை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close