[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வாழ்நாள் தலைவர்கள் தேர்வு... ஒலிம்பிக் சங்கத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் நோட்டீஸ்

choose-life-vijay-goel-accused-the-leaders-of-the-association-of-olimpic

ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள கல்மாதி, சவுதாலா ஆகியோரை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்களின் நியமனம் குறித்து வி‌‌ளக்கம் கேட்டு ‌மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவர்களின் நியமனம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் அவர்களை அந்த கௌரவப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். அல்லது அவர்களே தாமா‌க முன்வந்து பதவி விலக வேண்டும். அதுவரை இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் கோயலின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் பொறுப்பை ‌ஏற்க சுரேஷ் கல்மாதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் என்.ராமச்சந்திரனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அத்தகைய கௌரவத்தை தமக்கு வழங்கியமைக்காக நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த ‌தருணத்தில் அந்த பொறுப்பை ஏற்பது உகந்ததாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்‌ள அபய் சிங் சவுதாலா, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிக்கான பொறுப்பில் இருந்து விஜய் கோயல் விலகி நிற்பதாக கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close