[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தி சந்திப்பு

rahulgandhi-meets-pmnarendra-modi

கோதுமைக்கு இறக்குமதி வரி ரத்து செய்ததை அரசு திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடியிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கும் முன் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர் எனவே விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியதாகவும், கோதுமைக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ததை அரசு திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். இறக்குமதி வரி ரத்து முடிவை திரும்பப் பெறாவிட்டால் அது விவசாயிகளை பேரழிவுக்கு கொண்டு செல்லும் என்று கூறியதாகவும். அனைத்துப் பிரச்னைகளையும் கேட்டுக் கொண்ட மோடி, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து உறுதி அளிக்கவில்லை என்று கூறினார்.

முன்னதாக, பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்தநிலையில் கட்சியினரோடு பிரதமர் மோடியை ராகுல் நேரில் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close