[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தும் காலக்கெடுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

sc-denies-extending-use-of-banned-notes-for-utilities

மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை பல்வேறு சேவைகளுக்குப் பயன்படுத்தும் காலக்கெடுவை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. பழைய ரூபாய் நோட்டுகளை அரசு சேவைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்துவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், வாரத்துக்கு ரூ.24,000 பணம் எடுக்கும் முறையை சரியாக நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தியது.

அதேபோல நாடுமுழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணமதிப்பிழப்பு விவகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்குகளின் விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close