[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

சுஷ்மா ஸ்வராஜ்-க்கு சிறுநீரகம் கொடுக்க முன்வரும் போக்குவரத்து காவலர்

traffic-cop-in-madhya-pradesh-offers-kidney-to-sushma-swaraj

சிறுநீரகக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்-க்கு, தனது சிறுநீரகத்தை தானம் செய்ய போக்குவரத்து காவலர் ஒருவர் முன்வந்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 7-ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சுஷ்மா ஸ்வராஜ்-க்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்ய போக்குவரத்து காவலர் ஒருவர் முன்வந்துள்ளார். போபாலில் போக்குவரத்து காவலராக பணியாற்றும் கவுரப் டாங்கி என்பவர், சுஷ்மா ஸ்வராஜின் உடல்நிலை சரியில்லாதது குறித்து செய்தித்தாளில் வந்த செய்திகளை படித்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜ் ஒரு நல்ல தலைவர் என்பதால் தாமே அவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்யலாமே என்ற யோசனையில் இந்த தியாக முடிவை எடுத்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜ் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close