[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

’தேர்தல் நேரத்தில் மக்கள் விரலில் கருப்பு மை’... மம்தா பானர்ஜி கேள்வி

desperate-attempt-to-start-a-black-mechanism-mamata

வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றுபவர்கள் விரலில் கருப்பு மை வைக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தசூழலில் வங்கிகளில் பணத்தை மாற்றுபவர்கள் விரலில் கருப்பு மை வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை கடுமையாக விமர்ச்சித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாட்டின் சில பகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறும் சூழலில் அரசின் இந்த அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் ரயில்வே, பெட்ரோல் பங்க்குகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள மம்தா, மாநில அரசின் கீழ் செயல்படும் விவசாயத் துறை, கூட்டுறவு வங்கிகள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் விலக்கு அளிக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை நாளை சந்தித்து முறையிட உள்ளதாகவும் மம்தா, தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close