[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

2 நாட்களில் 3ஆவது முறையாக தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி

rahul-gandhi-detained-in-delhi

டெல்லியில் போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வலியுறுத்தி, ராகுல் காந்தி தலைமையில், ஜந்தர் மந்தரிலிருந்து இந்தியா‌ கேட் வரை‌ மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி‌ செல்ல காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.

அதற்காக, தொண்டர்களுடன் ஜந்தர் மந்தர் நோக்கி வந்த ராகுல் காந்தியை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி துக்ளக் ரோடு காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அப்போது, போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 2 மணிநேர தடுப்புக் காவலுக்குப் பின் ராகுல் காந்தியை டெல்லி காவல்துறையினர் விடுவித்தனர்.

இதுதொடர்பாக பேசிய ராகுல் காந்தி, தம்மை காவல்துறையினர் பிடித்துச்சென்றது, ஜனநாயக கேலிக்கூத்து என கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு பதவி, ஒரே ஓய்வூதியத்தில் அதிருப்தியடைந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராம் கிஷன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக ராகுல்காந்தி குரல் கொடுத்துவருகிறார். டெல்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த வீரரின் உடலை நேற்று முன்தினம் பார்க்கச் சென்ற ராகுல் காந்தியை போலீசார் இரண்டு முறை தடுப்புக் காவலில் வைத்து பின்னர் விடுவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close