[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

ஆந்திரா, தெலங்கானாவில் 4-வது நாளாக நீடிக்கும் கனமழை: மீட்பு பணிகள் தீவிரம்

heavy-rain-in-andhra-pradesh-and-telangana

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நீடிக்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் ஆந்திராவில் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, ஸ்ரீகாகுளம், கிழக்கு, மேற்கு கோதாவரி போன்ற மாவட்டங்களில் மழைநீர் வெள்ளமாக தேங்கியுள்ளது. வெள்ளத்தில் 9 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தெலுங்கானவில் மேடக் என்னுமிடத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் இறந்துள்ளனர்.
கடும் மழையினால் சாலைகள், ரயில் நிலையங்களில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதித்துள்ளது. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் வரத்து தடைபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் மழை நீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் துணை ராணுவத்தினர் மீட்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர, தெலங்கானா மாநில கல்வி நிலையங்களுக்கு நேற்றும் இன்றும் விடுமுறையும், மென்பொருள் நிறுவனங்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்குமாறு மென்பொருள் நிறுவனங்களை மாநில தகவல் தொழில் நுட்பத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் அடுத்த 3 நாட்களுக்கும் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close