[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

என்னது பெட்ரோல் விலை 1 காசுதான் குறைஞ்சுதா ?

petrol-diesel-price-cut-by-all-of-1-paisa

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயித்து வருகின்றன. மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதற்கு கர்நாடக தேர்தல் தான் காரணம் என சிலர் விமர்சித்து வந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை எண்ணெய் நிறுவனங்கள் மறுத்தன. மக்களின் நலன் கருதியே பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது எனக்கூறினர். ஏப்ரல் மாதம் கடைசியில் இருந்து மே 13ஆம் தேதி வரை எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. கர்நாடகாவில் மே 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இந்நிலையில் மே 14ஆம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 15நாட்களாக விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே இருந்தது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை  ரூபாய் 80-ஐ தாண்டியது. டீசல் விலையும் ரூபாய் 70-ஐ தாண்டியது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இன்று காலை பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசும். டீசல் விலை 60 காசு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதன்படி சென்னையில் பெட்ரோல், லிட்டருக்கு 80 ரூபாய் 80 காசும். டீசல் ஒரு லிட்டர் 72 ரூபாய் 58 காசுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 16 நாட்களாக உயர்ந்தே காணப்பட்ட எரிபொருள் விலை தற்போது குறைந்துள்ளது என பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. விலை மாற்றத்தில் சிறிது பிழை ஏற்பட்டுவிட்டதாகும் 60 காசு குறைக்கப்படவில்லை ஒரு காசுதான் குறைத்துள்ளோம் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. இதனைக்கேள்விப்பட்ட மக்கள் நொந்துக்கொண்டனர். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close