[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

கடந்த வாரம் அதிகரித்த தங்கம் விலை, இந்த வாரத் தொடக்கத்தில் குறைந்திருக்கிறது

gold-price-dips-for-second-day-as-stocks-gain-china-return-eyed

கடந்த வாரம் மிகப் பெரிய அளவு ஏற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை, இந்த வாரத் தொடக்க நாளில் குறைந்திருக்கிறது.

இந்திய ரூபாய் மதிப்பு வலுப்பெற்றிருப்பதும், கடந்த வார அதீத ஏற்றத்தால் ஏற்பட்டுள்ள திருத்தமும் இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

இன்று காலை சென்னையில் 24 கேரட் தங்கம் கிராம் ஒன்று 28 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 906க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 26 ரூபாய் இறக்கம் கண்டு, 2 ஆயிரத்து 717ஐ தொட்டுள்ளது.

ஒரு சவரன் விலை 208 ரூபாய் குறைந்து 21 ஆயிரத்து 736க்கு கிடைக்கிறது. வெள்ளியைப் பொறுத்தவரை, சில்லறை விற்பனையில் ஒரு கிராம் 80 காசுகள் குறைந்து, 40 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 805 ரூபாய் இறக்கம் கண்டு, 37 ஆயிரத்து 720க்கும் விற்பனையாகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close