[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு
  • BREAKING-NEWS ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி- டெல்லியில் விடியவிடிய போராட்டம்
  • BREAKING-NEWS 'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
  • BREAKING-NEWS ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை: ஜன. 5 வரை கல்லூரி மூடல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்

ரூ.20,280 கோடி மதிப்பிலான அலைக்கற்றை தொகுப்பை வாங்கியது 'வோடஃபோன்' நிறுவனம்

vodafone-to-spend-rs-20-280-cr-on-acquired-spectrum

அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் ரூ.20,280 கோடி மதிப்பிலான அலைக்கற்றை தொகுப்பை வாங்கியுள்ளது.

கடந்த 1ம் தேதி தொடங்கி, 6ம் தேதி வரையான ஐந்து நாட்களில், ரூ.5.63 லட்சம் கோடி நிதி திரட்டும் வகையில், பல்வேறு தரப்பிலான அலைக்கற்றை தொகுப்புகளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் ஏலம் விட்டது. எனினும், இதற்கு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இதனால், ஏலத்திற்கு வைக்கப்பட்ட அலைக்கற்றை தொகுப்பில், 40% வரை மட்டுமே ஏலம் விடப்பட்டது. இதன்மூலமாக, மத்திய அரசுக்கு ரூ.65,789 கோடி நிதி மட்டுமே திரட்டப்பட்டது

இதில் 4ஜி அலைக்கற்றையும் அடங்கும். இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.14,244 கோடிக்கும், ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ.12,798 கோடிக்கும் அலைக்கற்றைகளை வாங்கியது.

இந்நிலையில் ரூ.20,280 கோடி மதிப்பிலான அலைக்கற்றை தொகுப்புகளை பெற்றுள்ளதாக, இந்தியாவை சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 4ஜி சேவைக்கு உதவும் வகையில், 1,800 மெகா ஹெர்ட்ஸ், 2,100 மெகா ஹெர்ட்ஸ், 2,500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை தொகுப்புகளை பெற்றுள்ளதாகவும், இந்திய அளவில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல்ஃபோன் இணையதள சேவையை சிறப்பாக மேற்கொள்ள முடியும் எனவும் வோடஃபோன் குறிப்பிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close