[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

“ எனக்கு சொந்தமா‌ன இடங்களில் ஐடி ரெய்டு நடக்கலாம்”- ப.சிதம்பரம்

income-tax-dept-may-conduct-raid-at-my-house-p-chidambaram

தனக்கு சொந்தமான இடங்களில் எந்த நேரத்திலும் வருமான வரித்துறையின் சோதனை நடைபெறலாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம் ! எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும்  தெரிந்த செய்திதான். இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்” என பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் மத்திய அரசின் வருவாய் துறைச் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சோதனைகள் நடுநிலையாகவும், பாரபட்சமின்றியும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் இருக்க வேண்டும் என தெரிவித்தது. அத்துடன் முறைகேடாக பணம் பயன்படுத்துவது தொடர்பான த‌கவல்களை தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close