[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

’அரசியல் விளம்பரங்கள் வெளியிடத் தடை’: தேர்தல் ஆணையம்

election-commission-bans-uncertified-political-ads-on-poll-date-and-day-before

தேர்தல் நாளிலும், அதற்கு முந்தைய நாளிலும் தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்களை பத்திரிகைகளில் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வரும் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அதோடு பத்திரிகை மற்றும் மீடியாக்களில் விளம்பரங்கள் வெளியிட்டும்  ஆதரவை கோரி வருகின்றன.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் மக்களை தவறாக வழி நடத்தும் வகையில் தேர்தல் நாளிலும், அதற்கு முந்தைய நாளிலும் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் தேர்தலின் கடைசி நேரத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களால் ஒட்டுமொத்த தேர்தல் நடவடிக்கையும் பாதிக்கப் படும் என புகார்கள் வந்த நிலையில், அவதூறு மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் விளம்பரங்களால் அசம்பாவிதம் நிக‌ழக்கூடாது என தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. 

இதனையடுத்து தேர்தல் நாளிலும், அதற்கு முந்தைய நாளிலும் தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்களை பத்திரிகைகளில் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள் ளது. இது அனைத்து கட்ட தேர்தலுக்கும் பொருந்தும் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close