[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு
  • BREAKING-NEWS சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

வேலையில்லா திண்டாட்டத்தை உணர்த்த மாணவர்களின் பக்கோடா பரப்புரை

students-campaign-in-madurai

மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கத்தினர் பக்கோடா விற்பனை செய்து நூதன முறையில் பரப்புரை செய்தனர்.

மதுரையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் தெற்கு வாசல் பகுதியில் நூதன முறையில் பரப்புரை செய்தனர். அப்போது பட்டதாரிகள் உடையணிந்த அவர்கள் பொதுமக்களுக்கு பக்கோடா விற்பனை செய்து நூதன முறையில் தேர்தல் பரப்புரை செய்தனர்.

படித்த இளைஞர்கள் பக்கோடா விற்றாவது சுய தொழில் செய்யலாம் என கடந்த ஆண்டு பிரதமர் மோடி கூறி இருந்தார். இந்நிலையில் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டும் விதமாகவும், மோடியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நூதன பரப்புரையில் மாணவர்கள் ஈடுபட்டனர். அப்போது  பொதுமக்களுக்கு பக்கோடா விற்பனை செய்த மாணவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாகவும் நூதன முறையில் வாக்குகள் சேகரித்தனர்.  நூதன பரப்புரையினால் அந்தப் பகுதி பரபரப்பானது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close