[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

இந்தக் காலத்திலும் பிரியாணிக்காக திமுகவினர் சண்டையிடுகின்றனர்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ops-election-campaign-at-tiruvarur

இந்தக் காலத்திலும் பிரியாணிக்காக திமுகவினர் சண்டை போட்டு கொள்கின்றனர் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஓபிஎஸ், “ திமுகவிற்கு நல்லது செய்தால் பிடிக்காது. ஏழை மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நீதிமன்றம் மூலமாக நிறுத்தி உள்ளனர். உறுதியாக நீதிமன்றத்தில் வெற்றி பெற்று 2000 ரூபாய் வழங்குவோம்.

ஸ்டாலின் சொல்கிறார் ஈபிஎஸ் ஓபிஎஸ் நாட்டை தீயிட்டு கொளுத்திவிட்டார்கள் என்று. நாங்கள் என்ன தீப்பந்தமா வைத்து கொண்டு அழைக்கிறோம். திமுக ஆட்சியில் தான் தினகரன் பத்திரிகை அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. அதற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது. இந்த காலத்திலும் பிரியாணிக்காக திமுகவினர் சண்டை போட்டு கொள்கின்றனர். நாங்கள் நல்லவர்களாக கூட்டு சேர்ந்துள்ளோம். நாட்டை வலிமையாக ஆளும் பிரதமர் மோடியால், நம் நாட்டை தொட்டு பார்க்க பிற நாட்டினர் அஞ்சுகின்றனர். அந்த அளவிற்கு நிர்வாக திறன் உள்ளவர் பிரதமர் மோடி” என ஓபிஎஸ் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close