[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

நாளை ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை

5-state-assembly-elections-results-tomorrow

மக்களவை தேர்தல் இறுதி பலப்பரீட்சைக்கு முன், அரையிறுதியாட்டமாக கருதப்படும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு முடிவுகள் நாளை எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளன.

சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் சென்ற மாதம் 12ஆம் தேதி தொடங்கி கடந்த 7ஆம் தேதி வரை நடந்தன. இறுதிக்கட்டமாக கடந்த 7ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. 

பெரும்பாலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி ஐந்து மாநில தேர்தலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. பதிவான வாக்குகளுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா, ஆட்சியைத் தக்க வைக்கும் எண்ணத்தில் உள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றும் நம்பிக்கையில் காங்கிரஸ் இருக்கிறது. 

மேலும், தெலங்கானாவில் ஆளும் ராஷ்ட்ரிய சமிதிக்கும் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. நாளை காலை 8 மணிக்குத் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பதால், ஓரிரு மணி நேரத்தில் யாருக்கு வெற்றி என்பது தெரிய வந்து விடும். 

5 மாநில தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க புதிய தலைமுறையும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர்தல் நடந்த மாநிலங்களில் புதிய தலைமுறை செய்தியாளர்கள் உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை தெரிவிக்க களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தெலங்கான‌ மாநில ஆளுநர் நரசிம்மாவை அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் சந்தித்து, வாக்கு எண்ணிக்கைப்பின் போதிய உறுப்பினர்கள் ஆதரவு தங்கள் கூட்டணிக்கு இருக்கும்பட்சத்தில், ஆட்சியமைக்க முதலில் தங்களையே அழைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவா, கர்நாடகா மாநிலங்களில் ஆட்சியமைக்க ஏற்பட்ட பிரச்சனையை கருத்தில் கொண்டு, ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close