[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021ம் ஆண்டு அரசியலில் தமிழ் மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது... தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி

neet-exam-results-released

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 5ஆம் தேதி கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று முடிந்தது. ஒடிஷா மாநிலத்தில் மட்டும் ஃபானி புயல் பாதிப்பு காரணமாக நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு பின்னர் கடந்த 20ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் தமிழகத்தில் 48.57 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் 50 இடத்தில் தமிழக மாணவர்கள் யாருமில்லை. அதேசமயம் தமிழக மாணவியான ஸ்ருதி அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்துள்ளார். இவர் 720 மதிப்பெண்களுக்கு 685 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வில் தமிழகத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு 9.01 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளார். நீட் தேர்வு முடிவுகளை http://www.nta.ac.in  , http://www.ntaneet.nic.in   ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close