[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

விஷாலின் தந்தையிடம் மோசடி - கல்குவாரி உரிமையாளர் கைது

police-arrested-accused-about-vishal-dad-complaint

விஷாலின் தந்தையிடம் மோசடி - கல்குவாரி உரிமையாளர் கைது

நடிகர் விஷாலின் தந்தையிடம் மோசடி செய்த கல்குவாரி அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நடிகர் விஷாலின் தந்தையிடம் ரூ. 86 லட்சம் மோசடி செய்தாக கல்குவாரி உரிமையாளர் வடிவேலு என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் விஷால் தந்தை ஜி.கே ரெட்டி. இவர் ஒரு நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். பிரபல தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கான ராக்‌ஷஸி என்ற படத்தில் முதல் முறையாக ராதாரவி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து தமிழில் நேத்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். 

இவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தன்னுடைய குவாரியில் இருந்து கருங்கல், ஜல்லி தருவதாக கூறி தொழிலதிபர் வடிவேலு என்பவர் தன்னிடம் ரூ. 86 லட்சம் பணம் வாங்கியதாகவும் ஆனால் அவர் குறிப்பிட்டபடி கருங்கல், ஜல்லியை கொடுக்காமலும் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமால் இழுக்கடித்து வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் வடிவேலுவை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close